தசாப்தங்களில் மிக உயர்ந்த புள்ளியில்...அணுஆயுத ஆபத்து: ஐ.நா பொதுசெயலாளர் வருத்தம்
உலக பதற்றத்தை தணிக்க நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்.
அணுசக்தி ஆபத்து தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது, ஐ.நா பொதுசெயலாளர் கருத்து
உலகில் அணுசக்தி ஆபத்து தசாப்தங்களில் மிக உயர்ந்த புள்ளியில் உள்ளது என ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் திங்களன்று தெரிவித்துள்ளார்.
உலகில் தற்போது உக்ரைன் ரஷ்யா இடையிலான போர், சீனா தைவான் இடையிலான பதற்றம், அமெரிக்கா ஈரான் இடையிலான அணுஆயுத ஒப்பந்தம் என அடுத்தடுத்த பிரச்சனைகள் உலகில் மிகப்பெரிய நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் திங்கள்கிழமை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பொதுசெயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ், உலகில் அணுசக்தி ஆபத்து தசாப்தங்களில் மிக உயர்ந்த புள்ளியில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகள் அந்த ஆயுதங்களை முதலில் பயன்படுத்தக்கூடாது என்று உறுதியளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனைப் போன்று அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு எதிராக அவர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் , அல்லது பயன்படுத்த அச்சுறுத்துவோம், மேலும் அவை முழுவதும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று உறுதியளிக்க வேண்டும், அணுசக்தி வாள்வெட்டு சத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அணு ஆயுதப் போட்டியை முடிவுக்குக் கொண்டு வருவதன் முக்கியத்துவத்தையும், அணு ஆயுதங்கள் இல்லாத உலகிற்கு உறுதியளிப்பதன் முக்கியத்துவத்தையும் குட்டெரெஸ் வலியுறுத்தினார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனிய வீரர்களுக்கு இராணுவ பயிற்சி...ஐரோப்பிய யூனியன் தலைவர் அறிவிப்பு
நாடுகளுக்கு இடையிலான பதட்டங்களைத் தணிக்க பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.