1,000 ரொக்கெட்களுடன் அணு ஆயுத போர் பயிற்சியை துவக்கிய ரஷ்யா: உருவாகியுள்ள பதற்றமான சூழல்
உக்ரைன் விடயத்தில் யார் தலையிட்டாலும் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறியிருந்த நிலையில், தற்போது ரஷ்யா புதிதாக 1,000 ரொக்கெட்களுடன் அணு ஆயுத போர் பயிற்சியை துவக்கியுள்ளதால் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
அதற்குக் காரணம், உக்ரைனுக்கு அதிநவீன ரொக்கெட்களை அனுப்பப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்த உடனே ரஷ்யா இந்த போர்ப்பயிற்சியைத் துவக்கியுள்ளதுதான்.
அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திற்குள்ளாக, 1,000 ரஷ்யப் படைவீரர்கள் அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கினார்கள்.
கிட்டத்தட்ட பூமியிலுள்ள எந்த நாட்டையும் தாக்கும் திறன்கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய Yars ஏவுகணைகள், மாஸ்கோவின் மேற்கே போர்ப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுடன் தீவிர போர்ப்பயிற்சியில் ரஷ்யப்படைவீரர்கள் ஈடுபடும் புகைப்படங்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அணு ஆயுதங்களுடன் ரஷ்யா போர்ப்பயிற்சியைத் துவக்கியதையடுத்து, அணு ஆயுதப்போர் வெடிக்குமோ என்ற ஒரு அச்சம் உருவாகியுள்ளது.