எந்த நேரத்திலும் அது நடக்கலாம்... இந்தியாவே பொறுப்பு: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மிரட்டல்
இந்தியா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதப் போர் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எந்த நேரத்திலும் வெடிக்கலாம்
பாகிஸ்தான் செய்தி ஊடகமான ஜியோ நியூஸுக்கு அளித்த நேர்காணலில் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தை அடுத்து இரண்டு அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து கொதிநிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில், இந்தியா இந்தப் பிராந்தியத்தின் மீது ஒரு முழுமையான போரை திணித்தால், அத்தகைய ஆபத்து ஏற்பட்டு, அதில் ஒரு முட்டுக்கட்டை ஏற்பட்டால், எந்த நேரத்திலும் ஒரு அணு ஆயுதப் போர் வெடிக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இந்த விவகாரத்தை மேலும் மோசமாக்கினால், இரு தரப்பினரும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அறிகுறியுடன் போர் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டால், அதற்கான பொறுப்பு இந்தியாவையே சாரும் என்றார்.
முன்னதாக இந்தியாவின் அதிரடி நடவடிக்கையை பழித்த பாகிஸ்தான் பிரதமர், இந்தியாவிற்கு பதிலடி தர தமது இராணுவத்திற்கு அனுமதி அளித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு அணு ஆயுதப்போர் வெடிக்கும் என்றால் அது இந்தப் பிராந்தியத்தில் 125 மில்லியன் மக்களைக் கொல்லும் என்று அஞ்சப்படுகிறது.
துணிவுடனும் உறுதியுடனும்
மேலும் இரு தரப்பினரும் போரின் விளிம்பிலிருந்து பின்வாங்குமாறு உலக நாடுகள் அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் தரப்பில் இருந்து பதில் தாக்குதல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்த விவகாரத்தில் ஏற்படும் அடுத்தடுத்த விளைவுகளுக்கான பொறுப்பு இந்தியாவையே சாரும் என்றார்.
மட்டுமின்றி, எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ள நாடு துணிவுடனும் உறுதியுடனும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், திட்டமிட்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பயங்கரவாத உள்கட்டமைப்பை மட்டுமே தாக்கியதாகவும், பயங்கரவாதிகள் பயன்படுத்தும் ஒன்பது இடங்களைத் தாக்கியதாகவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும் பொதுமக்களையோ அல்லது இராணுவ முகாம்கள் உள்ளிட்ட வசதிகளையோ இந்தியா குறிவைக்கவில்லை என்றும் மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |