மூன்றாம் உலகப்போருக்கு தயாராகுங்கள்: ரஷ்யா முழுமைக்கும் புடின் விடுத்துள்ள எச்சரிக்கை
மூன்றாம் உலகப்போருக்குத் தயாராகுமாறு ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.
நாடு முழுவதும் ஒலித்த சைரன்கள்
இன்று காலை உள்ளூர் நேரப்படி சரியாக 10.30 மணிக்கு, ரஷ்யா முழுவதும் சைரன்கள் ஒலித்தன. இதற்கு முன்பும் இதுபோல ரஷ்யாவில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கச் செய்யப்பட்டுள்ளது என்றாலும், இம்முறைபோல் நாடு முழுவதும் எச்சரிக்கை இதுவரை விடப்பட்டதில்லை.
தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு இடையே, திடீர் திடீரென, மக்களை மூன்றாம் உலகப்போருக்கு தயாராகுமாறு புடின் எச்சரிக்கும் செய்திகள் ஒலிபரப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
Credit: AP
ரஷ்ய எல்லையில் அதிகரித்துவரும் அணு ஆயுதங்கள் முதலான ஆயுத முரண்பாடுகள் தொடர்பிலான அபாயம் காரணமாகவே நாடு முழுவதும் போர் ஒத்திகை நடத்தப்படுவதாக புடின் ஆதரவு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவசர சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி
இதற்கிடையில், ரஷ்ய அவசர சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், மக்கள் சைரன்களை கேட்கும்போது, திகிலடையக்கூடாது, அமைதியாக இருக்கவேண்டும், தொலைக்காட்சி அல்லது ரேடியோவை ஆன் செய்து, அதில் கூறப்படும் தகவலை கவனிக்கவேண்டும்.
Credit: Getty
ஏதாவது அவசர அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், அதை மக்களுக்கு சரியான நேரத்தில் தெரிவிப்பதற்காகவே இந்த எச்சரிக்கை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த வார இறுதியில் பிறந்தநாள் கொண்டாட இருக்கும் புடின், தனக்குதானே கொடுத்துக்கொள்ளும் பிறந்தநாள் பரிசாக, அணு ஏவுகணை ஒன்றை வீசலாம் என்ற தகவல் வெளியாகி அச்சத்தை உருவாக்கியுள்ளது.
Credit: AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |