முதலீட்டாளர்களை ஈர்க்க புதிய Golden Visa திட்டத்தை அமைத்துள்ள நாடு
பணக்கார முதலீட்டாளர்களை ஈர்க்க நியூசிலாந்து புதிய Golden Visa திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
நியூசிலாந்து தனது Golden Visa திட்டத்தை மாற்றி அமைத்து, ஆங்கில மொழித் தேர்வு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.
2024-ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர், நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட Active Investor Plus விசா ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று குடிவரவு அமைச்சர் எரிக்கா ஸ்டான்ஃபோர்டு அறிவித்தார்.
புதிய திட்டத்தில், கடுமையான விதிகளை தளர்த்தி, முதலீட்டாளர்களை நியூசிலாந்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்க அதிக நெகிழ்வுத்தன்மை கொண்டுள்ளதென அவர் தெரிவித்தார்.
முதலில், இந்த விசா திட்டம் ஆண்டுக்கு 1 பில்லியன் நியூசிலாந்து டொலர் முதலீட்டை ஈர்த்தது. ஆனால், 2022ல் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் காரணமாக விண்ணப்பங்கள் குறைந்தன.
புதிய திட்டத்தில் இரண்டு வகைகள் உள்ளன:
- Growth (உயர் அபாயம்): குறைந்தபட்சம் NZ$5 மில்லியன் முதலீடு செய்ய வேண்டும், விசா பெற்றவர்கள் 21 நாட்கள் நியூசிலாந்தில் இருக்க வேண்டும்.
- Balanced (கலப்பு அபாயம்): NZ$10 மில்லியன் முதலீடு தேவை, 105 நாட்கள் நாட்டில் இருப்பது கட்டாயம், பெரிய முதலீடுகளுக்கு தளர்வுகள் உள்ளன.
நியூசிலாந்து இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ள நிலையில், ஸ்பெயின், ஐர்லாந்து, பிரித்தானியா, கிரீஸ், மால்டா உள்ளிட்ட நாடுகள் Golden Visa திட்டங்களை ரத்து செய்து வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
New Zealand Golden visa rules, New Zealand