நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: 205 ஓட்டங்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 205 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதல் பேட்டிங்கில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜான் 44 ஓட்டங்களும், பிராண்டன் கிங் 33 ஓட்டங்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக் கொடுத்தாலும், கேப்டன் ரோஸ்டன் சேஸ் மற்றும் சாய் ஹோப் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை மிகப்பெரிய சரிவில் இருந்து மீட்டனர்.
இதில் சாய் ஹோப் 48 ஓட்டங்களும், ரோஸ்டன் சேஸ் 29 ஓட்டங்களும் குவித்து வெளியேறினர்
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 75 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்கள் குவித்தது.

சிறப்பான பந்துவீச்சு
நியூசிலாந்து அணியில் பிளேர் டிக்னா 4 விக்கெட்டுகளையும், மிச்சேல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்கள் குவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |