ஓ.பன்னீர்செல்வம் இருக்கை விவகாரம்: சபாநாயகரை முற்றுகையிட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்
தமிழக சட்டப்பேரவையில், எதிர்கட்சித்துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, சபாநாயகரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முற்றுகையிட்டதால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இருக்கை விவகாரம்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் மாற்றம் குறித்து அதிமுக ஏம்.எல்.ஏக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால், அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவு முன்பு முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
அதிமுக வெளியேற்றம்
இதனால், அவர்களை வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால், சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, " எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை மாற்றம் குறித்த நியாயமான கோரிக்கைகளை சபாநாயகர் முன்பு முன்வைத்தோம்.
சட்டப்பேரவையில் யாரை எந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்ற முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே உள்ளது. இருப்பினும், எங்களது கோரிக்கையை ஏற்று சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |