ரூ.89,999-க்கு Oben Roar EZ எலக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்.!

Ragavan
in தொழில்நுட்பம்Report this article
Oben Electric நிறுவனம் இந்தியாவில் Oben Roar EZ எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
இந்த பைக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 175 கிமீ தூரம் வரை பயணிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பைக்கை வெறும் 45 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் செய்ய முடியும்.
பெங்களூருவை தளமாகக் கொண்ட இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் மூன்று வகைகளில் மின்சார பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
மூன்று வகைகளும் வெவ்வேறு பேட்டரி பேக் விருப்பங்களைக் கொண்டிருக்கும்.
இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ.89,999 எக்ஸ்ஷோரூம் விலையிலும், டாப் வேரியண்ட்டில் ரூ.1.09 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இவை அறிமுக விலைகள்.
வாடிக்கையாளர்கள் ரூ.2,999 முன்பதிவு தொகையை செலுத்துவதன் மூலம் ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள டீலர்ஷிப்பில் பைக்கை முன்பதிவு செய்யலாம்.
டெஸ்ட் ரைடு மற்றும் டெலிவரி உடனடியாக கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Oben Roar EZ Electric Bike