சுறா மீன் மீது பயணிக்கும் ஆக்டோபஸ்: ஒரு அரிய காட்சி
நியூசிலாந்து நாட்டில், சுறாமீன் ஒன்றின் மீது ஆக்டோபஸ் ஒன்று பயணிக்கும் அரிய காட்சி ஒன்று சிக்கியுள்ளது.
சுறா மீன் மீது பயணிக்கும் ஆக்டோபஸ்
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலை ஆய்வாளர்கள் சிலர் Hauraki வளைகுடாவில் ஆய்வு மேற்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, கடல் அறிவியலாளரான ரோச்சல் கான்ஸ்டாண்டைன் (Rochelle Constantine) என்பவர் கண்ணில் சுறா மீன் ஒன்று தென்பட்டுள்ளது.
சுறா மீனை அவர் உற்றுப்பார்க்க, அதன் தலையில் ஏதோ மஞ்சள் நிறமாக இருப்பதைக் கண்ட அவர் அது என்னவாக இருக்கும் என எண்ணிக் குழம்பியுள்ளார்.
அவருடன் இருந்த ஒரு டெக்னீஷியன், ட்ரோன் ஒன்றை அனுப்ப, அந்த ட்ரோன் அந்த சுறாவின் அருகில் செல்லும்போதுதான் தெரிந்துள்ளது ஆக்டோபஸ் ஒன்று அந்த சுறாவின் மீது அமர்ந்து பயணிப்பது.
இந்த காட்சி, சமுத்திரத்தின் ஆச்சர்யங்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது என்கிறார் அறிவியலாளர் ரோச்சல்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |