ஒடிசாவில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் - திகில் வீடியோ!
சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ஒடிசாவில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள்
தமிழ்நாடு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கடந்த 28ம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக, காசி, சாய்பாபா கோவில் உட்பட பல கோவில்களுக்கு செல்வதாக தனியார் பேருந்தில் சுற்றுலா சென்றனர்.
இதனையடுத்து, கடந்த 7ம் தேதி இரவு ஒடிசாவிலிருந்து குஜராத்தில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் சென்றுள்ளனர். அன்று அதிகாலை 4 மணி அளவில் குஜராத்தில் தங்கும் விடுதி அருகே பேருந்து நிறுத்தப்பட்டது.
அப்போது, பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலரது உடைமைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி காட்சிகள் பதிவாகியிருந்தன.
பறக்கும் பஸ்ஸில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள்
அதிகாலை 2 மணி அளவில் பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மின்னல் வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது, பேருந்திற்கு பின்னால் 3 பேர் பைக்கில் வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, சினிமாவை மிஞ்சும் அளவிற்கு பேருந்திற்கு இணையாக வாகனம் ஒருவன் ஓட்டி வர, இன்னொருவன் பேருந்திற்கு தாவி, பேருந்தில் உள்ள உடமைகளை கீழே தள்ளினான். பின்னர் ஓடும் பேருந்திலிருந்து கத்தியை வாயில் கவ்வியபடியே பேருந்திலிருந்து கீழே பைக்கில் இறங்கி தப்பினான்.
தற்போது இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே வியப்படைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
கோவையில் நெடுஞ்சாலை பட வானில் ஓடும் பேருந்தின் மீது ஏறி கொள்ளையடித்த கும்பல்.
— Ramesh (@RHoneykumar) June 10, 2023
கோவையில் இருந்து வடமாநிலத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்தின் பின்பக்கம் வழியாக ஏறி,கொள்ளையர்கள் உடமைகளை கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... pic.twitter.com/RnS1v9jLq5