இன்னும் உரிமை கோரப்படாமல் கொத்துக் கொத்தாக சடலங்கள்: ஒடிசாவில் நீடிக்கும் துயரம்
இந்திய மாநிலம் ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் சிக்கி 275 பேர்கள் மரணமடைந்த நிலையில், இன்னும் உரிமை கோரப்படாமல் கொத்தாக சடலங்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்த தகவலும் இதுவரை இல்லை
ஒடிசா மாநில அதிகாரிகள் தரப்பு சம்பவம் நடந்த பகுதியில் இருந்து திங்களன்று குறித்த தகவலை தெரிவித்துள்ளனர். இதுவரை 105 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் எந்த தகவலும் இதுவரை இல்லை என தெரிவித்துள்ளனர்.
@reuters
தொடர்புடைய விபத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயங்களுடன் தப்பியுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பல குடும்பங்கள் தங்கள் உறவினர்களை காணவில்லை என தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை மதியத்திற்கு மேல் நடந்த இந்த கோர ரயில் விபத்தானது இந்த நூற்றாண்டில் இதுவரை நடந்த விபத்துகளில் மிகவும் மோசமானது என கூறுகின்றனர். சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்ட நிலையில், அதன் அருகாமையில் உள்ள தடத்தில் சென்ற பயணிகள் ரயிலானது இதில் சிக்கி விபத்துக்குள்ளானது.
அத்துடன் மூன்றாவதாக இன்னொரு பயணிகள் ரயிலும் மோதிக்கொள்ள, சம்பவப்பகுதி போர்க்களமாக மாறியுள்ளது. தொடர்புடைய இரு பயணிகள் ரயிலிலும் 3,000 பயணிகளுக்கு மேல் பயணம் செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
எண்ணிக்கை 275 என மட்டும்
வெளியான தரவுகளின் அடிப்படையில் அந்த இரு ரயில்களும் நிரம்பியிருந்ததாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில், இறந்தவர்கள் எண்ணிக்கை 275 என மட்டும் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@reuters
பல குடும்பங்கள் தற்போது தங்கள் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில், சுற்றுவட்டாரத்தில் உள்ள மருத்துவமனைகளில் தகவல் தேடி வருகின்றனர். புபனேஷ்வர் அரசு மருத்துவமனையில் மட்டும் 123 சடலங்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளனர்.
ஆனால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உறவினர்கள் தொடர்பில் தகவல் சேகரிக்க குவிந்துள்ளனர். மேலும், விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கியவர்களை அடையாளம் காணும் பணி என்பது சிக்கல் மிகுந்தது என பொலிஸ் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, ஒரு சடலத்தை இருவேறு குடும்பங்கள் அடையாளம் கண்டுள்ளதும், சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது எனவும்,
இதனால் டி.என்.ஏ சோதனை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தமட்டில் தினசரி 12,000 பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
ஆனால் கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படாமல், மிகவும் பிந்தங்கிய நிலையிலேயே உள்ளது.