"என் மகனை காணோம்” கண்ணீர் விட்டபடியே இறந்த மகனின் உடலை தேடும் தந்தை
ஒடிசா ரயில் விபத்தில் இறந்த மகனின் உடலை தந்தை தேடும் காட்சிகள் வெளியாக பலரது மனங்கனை ரணமாக்கியுள்ளது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே 2ம் தேதி இரவு 7 மணியளவில் மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.
ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சிக்னல் பிரச்சனையால் விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
வீடியோவை காண
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த மகனின் உடலை கண்ணீருடன் தந்தை தேடும் காட்சிகள் வெளியாகி கலங்கவைத்து விட்டன.
அந்த வீடியோவில் இறந்தவர்களின் சடலங்கள் வரிசையாக ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளன, வயதான நபர் ஒருவர் ஒவ்வொரு சடலமாக அழுதபடியே பார்க்கிறார்.
அங்கிருந்தவர்கள் விசாரிக்கும் போது ”மகனை தேடிக் கொண்டிருப்பதாக” கூறுகிறார்.
அந்த நபரின் பெயர் ரவீந்திர ஷா(வயது 53) என்பதும், மகன் கோவிந்த ஷாவை காணாமல் தேடிக் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.