ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி பயங்கர விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் பலி என தகவல்
ஒடிசாவின் பாலசோரில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தடம் புரண்டதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ஒடிசாவில் பாலசோரின் பஹானாகா நிலையம் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தடம் புரண்டதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.
காரக்பூரின் கோட்ட ரயில்வே மேலாளரின் (டிஆர்எம்) தகவலின்படி, ஷாலிமார்-ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (12841) மாலை 6:51 மணியளவில் பஹானாகா நிலையத்தில் தடம் புரண்டது, பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் (12864) ரயில் அதே இடத்தில் மாலை 6.55 மணிக்கு தடம் புரண்டது.
இதற்கிடையில், இந்த விபத்து மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்டது - இரண்டு பயணிகள் ரயில்கள் மற்றும் ஒரு சரக்கு ரயில் என ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்தார்.
மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் பாலசோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Congress Sevadal expresses deep anguish over the train accident of Coromandel Express in Odisha where huge casualties have been reported.
— Congress Sevadal (@CongressSevadal) June 2, 2023
May the departed souls rest in peace.
All volunteers of @SevadalOR are requested to reach the spot and help authorities in relief measures. pic.twitter.com/yZIKuDwJmx
தேடல் மற்றும் மீட்புப் பணிக்காக குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளன. மேலும், கூடுதல் உதவி தேவைப்பட்டால், மாநில அளவில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஒடிசாவில் உள்ள சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பான தகவல் மற்றும் உதவிக்கு, SRC அலுவலகம், 6782262286 என்ற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணை வெளியிட்டது.
மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக NDRF-ன் பல குழுக்கள் சம்பவ இடத்திற்குச் செல்கின்றன. இதை கண்காணிக்க, ஒடிசா தீயணைப்பு துறை டி.ஜி., சுதன்ஷு சாரங்கிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி ஒடிசா வருவாய்த்துறை அமைச்சர் பிரமிளா மல்லிக் மற்றும் எஸ்ஆர்சி விபத்து நடந்த இடத்திற்குச் சென்று சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
The number of casualties increased over 450 including more than 75 fatal casualties in Balasore #TrainAccident in Odisha.
— Senapatitimes (@senapatitimes) June 2, 2023
Really very heartbreaking ? update. May god save the injured.
Prayers ?
pic.twitter.com/ToXnAKlz7R
இதற்கிடையில், முதல்வர் நவீன் பட்நாயக் நிலைமையை ஆய்வு செய்தார். செய்தியாளர்களிடம் பேசிய பட்நாயக், "உண்மையிலேயே இந்த சோகமான ரயில் விபத்து குறித்து நிலைமையை ஆய்வு செய்து வருகிறேன். நாளை அதிகாலையில் நான் அங்கு பறக்கிறேன்" என்றார்.
பிற உதவி எண்கள்: ஹோரா ஹெல்ப்லைன் - 03326382217; காரக்பூர் உதவி எண் - 8972073925, 9332392339; பாலசோர் உதவி எண் - 8249591559, 7978418322; ஷாலிமார் உதவி எண் - 9903370746.
Odisha Train Accident, Train Accident