லஞ்சப் பணத்தை விழுங்கிய அதிகாரி! கையும் களவுமாக சிக்கிய வீடியோ
லஞ்சப் பணத்தை விழுங்கிய அதிகாரி ஒருவர் கையும் களவுமாக சிக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ரூ.5,000 லஞ்சத்தை விழுங்கிய அதிகாரி
இந்திய மாநிலம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள கட்னி பகுதியைச் சேர்ந்தவர் சந்தன் சிங் லோதி. இவர், நில வழக்கு தொடர்பாக அப்பகுதியில் உள்ள வருவாய் துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, வருவாய் துறை அதிகாரியான கஜேந்திர சிங் 5,000 ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார்.
உடனே ஜபல்பூர் லோக்ஆயுக்தா சிறப்பு காவல்துறையிடம் சந்தன் சிங் லோதி புகார் அளித்துள்ளார். பின்பு, ஜபல்பூர் லோக்ஆயுக்தா சிறப்பு காவல்துறை அதிகாரிகள் சந்தன் சிங் லோதியிடம், அவர் கேட்ட பணத்தை கொடுங்கள் என்று கூறினர்.
இதனையடுத்து, கஜேந்திர சிங்கின் தனி அலுவலகத்தில் வைத்து சந்தன் சிங் லோதி லஞ்ச பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த ஜபல்பூர் லோக்ஆயுக்தா அதிகாரிகளை கஜேந்திர சிங் பார்த்துள்ளார்.
பின்னர், வருவாய்த்துறை அதிகாரி தான் பெற்ற லஞ்ச பணத்தை மறைக்க வாயில் போட்டு விழுங்கினார்.
வைரலான வீடியோ
கஜேந்திர சிங்கின் தனி அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்பு, அவரை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பல முயற்சிகளுக்குப் பிறகு, லஞ்சத் தாள்கள் அவரது வாயிலிருந்து கூழ் வடிவில் எடுக்கப்பட்டன. மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது பொலிசார் செய்தனர்.
This forward of an employee in #MadhyaPradesh who reportedly swallowed Rs 5000 he had taken as bribe when caught red-handed, reminded me of a story in my class 9 textbook called #SeventeenOranges where narrator swallows all peel, fruit & pips to destroy evidence @ndtv @ndtvindia pic.twitter.com/AY7ywA5Wfb
— Uma Sudhir (@umasudhir) July 25, 2023
இதனை மருத்துவமனையில் இருந்தவர்கள் வீடியோவாக எடுக்க, தற்போது வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |