'நெருப்பு எறும்பு மழை' பெய்யும்! வலி தாங்கமுடியாது., ஹவாய் மக்களுக்கு அரசு எச்சரிக்கை
ஹவாய் தீவின் குடியிருப்பாளர்கள் மீது நெருப்பு எறும்புகள் மழையாக பொழியக்கூடும் என அரசு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
நெருப்பு எறும்புகளின் தாக்குதல் குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவர்கள் ஹவாய் வாசிகளுக்கு "எறும்பு மழை" எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மில்லியன் கணக்கில் நெருப்பு எறும்புகள்
அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் உள்ள கவாய் தீவில் மில்லியன் கணக்கான நெருப்பு எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டில் இந்த எறும்பு இனங்கள் முதன்முதலில் கண்டறியப்பட்டது. ஆனால், இப்போது அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மிக விரிவாக பெருகியுள்ளது.
Getty Images
ஹவாயில் Lihue பகுதியில் இருந்து வடக்கே ஆறு மைல் தொலைவில் கிழக்கு கவாயில் (Kauai) அமைந்துள்ள Wailua River State Park பூங்காவில் மில்லியன் கணக்கான சிறிய நெருப்பு எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த எறும்புகள், செல்லப்பிராணிகள், விவசாயத் துறை, உள்ளூர்வாசிகள் மற்றும் ஹவாயின் நான்காவது பெரிய தீவான Kauai-க்கு வருபவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நெருப்பு எறும்பு மழை
ஹவாய் அரசாங்க அதிகாரிகள், எறும்புகள் "வானத்திலிருந்து விழுகின்றன" என்றும், அவற்றின் மோசமான பிடியின் விளைவாக "மக்கள் மீது மழை பொழிந்து அவர்களைக் கொட்டும்" என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Hawaii Ant Lab-ல் பணிபுரியும் Heather Forester, "ஹவாயில் உள்ள எங்கள் குடியிருப்பாளர்களின் வாழ்க்கை முறையை இந்த எறும்புகள் மாற்றுகின்றன. மக்கள் நடைபயணம் செய்து கடற்கரைக்குச் செல்வார்கள், அந்நேரம் பார்த்து, எறும்புகள் மக்கள் மீது மழை போல் பொழிந்து கடிக்கத் தொடங்கும்" என்கிறார்.
மேலும், படுக்கையில் உறங்கும் போது இந்த எறும்புகள் மனிதர்களைக் கொட்டியதாக நிறைய செய்திகள் உள்ளன.
State Department of Agriculture, Hawaii
ஹவாய் அரசாங்கத்தின் அறிக்கை
ஹவாய் அரசாங்கத்தின் நிலம் மற்றும் இயற்கை வளங்கள் துறை அக்டோபர் 3 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், "LFA (Little Fire Ant) உலகின் மிக மோசமான ஆக்கிரமிப்பு இனங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. LFA சிறியது, 1/16 அங்குல நீளம் மற்றும் வெளிர் ஆரஞ்சு நிறத்தில், அவை மெதுவாக நகரும். வெப்பமண்டல நெருப்பு எறும்பு போலல்லாமல், ஹவாயில் அது மிகவும் பெரியதாக் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Little Fire Ant கடித்தால்..,
இந்த எறும்பு கடித்தால், பயங்கரமாக வலிக்கும், உடலில் தடிப்புகள் ஏற்பட்டு சிவந்து காணப்படும். இந்த நெருப்பு எறும்பு கடித்தால், செல்லப்பிராணிகளின் கண்களுக்கு குருட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
அவை, தரையில், மரங்கள் மற்றும் பிற தாவரங்கள், மற்றும் கட்டிடங்கள் மற்றும் வீடுகளுக்குள் மிகப் பெரிய காலனிகளை உருவாக்கி ஒரு வீட்டையே முழுவதுமாக ஆக்கிரமிக்க முடியும் என்று எச்சரித்துள்ளனர்.