மகள் திருமணத்தில் நடனமாடி அசத்திய டொனால்டு டிரம்ப்: ஆச்சரியமூட்டும் வீடியோ காட்சி
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் இளைய மகள் டிப்பனி டிரம்ப், தனது காதலர் மைக்கேல் பவுலோஸை திருமணம் செய்து கொண்டார்.
டிப்பனி டிரம்ப்-மைக்கேல் பவுலோஸ் திருமணம்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் இளைய மகளான டிப்பினி டிரம்ப் (Tiffany Trump), தொழிலதிபர் மற்றும் லெபனான்-அமெரிக்கரான மைக்கேல் பவுலோஸ் (Michael Boulos) இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுடைய திருமணம் தந்தையாகிய டொனால்டு டிரம்ப்பின் சொத்துகளில் ஒன்றான புளோரிடாவின் மார்-எ-லாகோ (Mar-a-Lago) பாம் பீச்சில் நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு மணமகள் டிப்பனி டிரம்ப்பை தந்தை டொனால்டு டிரம்ப் மணமேடைக்கு அழைத்து வருவதுடன் இந்த திருமண விழா தொடங்கியது.
Wishing @TiffanyATrump and Michael an abundance of happiness and joy as they begin their lives together as husband and wife!
— Ivanka Trump (@IvankaTrump) November 13, 2022
May their love be a source of light in this world! ??? pic.twitter.com/3fIjnPQnQC
இதில் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், இவான்கா, எரிக் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டிப்பனி டிரம்ப், டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் மனைவி மார்லா மேப்பில்சின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமண விழாவில் டிரம்ப்பின் முன்னாள் மனைவியும் கலந்து கொண்டுள்ளார்.
நடனமாடி அசத்திய டொனால்டு டிரம்ப்
திருமண விழாவின் தொடர்ச்சியாக நடன கொண்டாட்டங்கள் தொடங்கின, திருமண தம்பதிகளான டிப்பனி டிரம்ப் மற்றும் மைக்கேல் பவுலோஸ் இருவரும் முதலில் நிலா ஒளியில் நடனத்தை தொடங்கினர்.
அதை தொடர்ந்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவுடன் கைகோர்த்து முத்தங்கள் பரிமாறி கொண்டு நடனமாடினார்.
The 45th President of The United States Donald J Trump and Melania grace a cotillion at the wedding of Tiffany and Michael Boulos at Mar-a-Lago ?#Trump #trumpRally #TrumpStefanik2024 #GOP pic.twitter.com/gd6llXGZbh
— Lands Aldershot Bowa IV⚜️ (@LandsBowaIV) November 13, 2022
250க்கும் குறைவான விருந்தினர்கள் கொண்ட விழாவில் டிரம்ப் நடனமாடியது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
திருமணம் தொடர்பான புகைப்படங்களை டிப்பனி டிரம்ப்பின் சகோதரி இவானா சமூக வலைதளத்தில் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.