ஈரான் மீது புதிய தாக்குதல்களுக்கு ட்ரம்ப் திட்டம்: உச்சத்தை எட்டிய எண்ணெய் விலை

Donald Trump Iran Crude Oil
By Arbin Apr 30, 2026 09:30 AM GMT
Report

ஈரான் போரில் சாத்தியமான நடவடிக்கைகள் தொடர்பில் புதிய திட்டங்கள் குறித்து, அமெரிக்க இராணுவம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு விளக்கமளிக்கத் தயாராகி வருவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.

கிட்டத்தட்ட 7 சதவீதம்

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் நிலவும் முட்டுக்கட்டையை உடைக்கும் முயற்சியாக, அந்த நாடு மீது குறுகிய மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல் அலைகளை மேற்கொள்ளும் திட்டத்தை அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் தயாரித்துள்ளதாக Axios என்ற செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈரான் மீது புதிய தாக்குதல்களுக்கு ட்ரம்ப் திட்டம்: உச்சத்தை எட்டிய எண்ணெய் விலை | Oil Jumps To Highest Price

இதனையடுத்து பிரெண்ட் கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 7 சதவீதம் உயர்ந்து, ஒரு கட்டத்தில் ஒரு பீப்பாய்க்கு 126 டொலருக்கும் (94 பவுண்டுகள்) அதிகமாகச் சென்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு இது மிக உயர்ந்த விலையாகும்.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்திருப்பதாகத் தோன்றுவதாலும், முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணை நடைமுறையில் இன்னும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதாலும், இந்த வாரம் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.

இந்த நிலையில், Axios வெளியிட்டுள்ள செய்தியில், இந்த முறை ஈரான் மீது முன்னெடுக்கப்படும் தாக்குதல் அதன் உள்கட்டமைப்பையும் குறிவைக்க வாய்ப்புள்ளது என்றே தெரியவருகிறது.

அடுத்த இலக்கு 140 டொலர்... மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்த ஈரான் சபாநாயகர் காலிபாஃப்

அடுத்த இலக்கு 140 டொலர்... மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்த ஈரான் சபாநாயகர் காலிபாஃப்

இன்ன்னொன்று, ஹார்முஸ் நீரிணையின் ஒரு பகுதியைக் கைப்பற்றி, வணிக போக்குவரத்திற்கு அனுமதி அளிப்பது. ஆனால் இப்படியான நடவடிக்கைகளுக்கு தரைப்படை அங்கே களமிறக்கப்பட வேண்டும்.

இதனிடையே, அமெரிக்கச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெயும் 2.3 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு சுமார் 109 டொலர் என்ற அளவில் இருந்தது.

ஈரான் மீது புதிய தாக்குதல்களுக்கு ட்ரம்ப் திட்டம்: உச்சத்தை எட்டிய எண்ணெய் விலை | Oil Jumps To Highest Price

மிகப்பெரிய தாக்கங்கள்

மேலும் ஜூன் மாதம் விநியோகம் செய்யவிருக்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய்க்கான ஒப்பந்தம் வியாழக்கிழமை காலாவதியாக உள்ளது. ஆனால் அமுலில் இருக்கும் ஜூலை மாதத்திற்கான ஒப்பந்தம் 2 சதவீதம் அதிகரித்து, ஆசிய சந்தையில் 113 டொலரை எட்டியுள்ளது.

மேலும், மோதல் தீவிரமடைவதற்கான ஒரு சிறிய வாய்ப்பு கூட, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஈரான் மீது புதிய தாக்குதல்களுக்கு ட்ரம்ப் திட்டம்: உச்சத்தை எட்டிய எண்ணெய் விலை | Oil Jumps To Highest Price

ஆனால், ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்த முயற்சிக்கும் கப்பல்களை ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தும் வரை, ஈரானிய துறைமுகங்களுக்கு முற்றுகை தொடரும் என்றே அமெரிக்கா கூறியுள்ளது.

ஈரான் மீது நீண்டகால முற்றுகையை மேற்கொள்ள அமெரிக்கா தயாராகி வருவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, புதன்கிழமையன்று எண்ணெய் விலைகள் 6 சதவீதம் உயர்ந்தன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US