உக்ரைன் - ரஷ்யா இடையே எரிசக்தி போர் நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலை சரிவு
Oil Prices Drop After Ukraine Russia Ceasefire: உக்ரைன் - ரஷ்யா இடையிலான அமெரிக்காவின் போர் நிறுத்த முயற்சி காரணமாக கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவு
ரஷ்யா மற்றும் உக்ரைனின் இடையே நிலவி வந்த எரிசக்தி மற்றும் ஆற்றல் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலில் புதிய முன்னேற்றமாக இருநாடுகளுக்கும் இடையே எரிசக்தி துறை சார்ந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் போர் நிறுத்த முன்னெடுப்புகளை தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
‘ இந்நிலையில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவு பதிவாகியுள்ளது.

அமெரிக்கா ரஷ்யா இடையே கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்தான டீசல் விநியோக ஒப்பந்தம் மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள போர் நிறுத்த அறிவிப்பு ஆகியவே இந்த வீழ்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த நடவடிக்கையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை நிலவரங்கள்
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.62% குறைந்து 103.02 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியது.
அதைப்போல வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியட் விலை பேரலுக்கு 1.92% வரை குறைந்து 90.08 அமெரிக்க டொலராக விற்பனையாகியுள்ளது.