ஈரான்-இஸ்ரேல் போர்: கச்சா எண்ணெய், தங்கம் விலை உயர்வு
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களும், ஈரான் பதிலடி நடவடிக்கைகளும் உலக எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.
இன்று (மார்ச் 2) காலை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 8 சதவீதம் உயர்ந்தது.
West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 72.52 அமெரிக்க டொலர், Brent crude 79.04 டொலர் என்ற அளவில் விற்பனையாகியது.
எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக விலை திடீரென உயர்ந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள், வளைகுடா பிராந்தியத்தில் எண்ணெய் விநியோகத்தை பாதித்துள்ளன.
ஹோர்முஸ் கடல்சந்தியில் நடந்த தாக்குதல்கள், உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதையை ஆபத்துக்குள் தள்ளியுள்ளன.
இதற்கிடையில், OPEC+ குழுவில் உள்ள சவுதி அரேபியா, ரஷ்யா, ஈராக், அமீரகம், குவைத், கஜகிஸ்தான், அல்ஜீரியா, ஓமான் ஆகிய 8 நாடுகள், ஏப்ரல் மாதம் முதல் தினசரி 2,06,000 பீப்பாய் கூடுதல் உற்பத்தி செய்வதாக அறிவித்துள்ளன. இது சந்தை எதிர்பார்ப்பை விட அதிகமாகும்.
தங்கம் விலை உயர்வு
எண்ணெய் விலை உயர்வுடன், தங்கத்தின் விலையும் 2.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக தங்கத்தை அதிகமாக வாங்கி வருகின்றனர். 2025-இல் 64 சதவீதம் உயர்ந்த தங்கத்தின் விலை, இப்போது மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேச அரசியல் பதற்றம், எரிசக்தி மற்றும் நிதி சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |