ஈரான் முற்றுகையை நீட்டிக்கும் அமெரிக்கா., எண்ணெய் விலை உயர்வு
அமெரிக்கா, ஈரானின் துறைமுகங்களுக்கு எதிரான முற்றுகையை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளதாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் மத்திய கிழக்கு பகுதியில் எண்ணெய் விநியோகத்தில் இடையூறு நீடிக்கும் அபாயம் உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் பொருளாதாரத்தையும் எண்ணெய் ஏற்றுமதியையும் கடுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், துறைமுகங்களுக்கு வரும் மற்றும் செல்லும் கப்பல்களைத் தடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதன் விளைவாக, உலக சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Brent கச்சா எண்ணெய் ஜூன் ஒப்பந்த விலை 52 சென்ட் (0.47%) உயர்ந்து, ஒரு பீப்பாய் 111.78 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. ஜூலை ஒப்பந்தமும் 0.4 சதவீதம் உயர்ந்து 104.84 டொலராக உள்ளது.
இந்த நடவடிக்கை, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மத்திய கிழக்கு பகுதியில் இருந்து வரும் எண்ணெய் விநியோகம் குறையும்போது, உலக சந்தையில் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |