குதிக்கும் எண்ணெய் விலை... ஈரான் போரால் ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு
ஈரானுடனான அமெரிக்கா-இஸ்ரேல் போர் ஐந்தாவது வாரத்தில் நுழைந்ததைத் தொடர்ந்து, ஆசியாவில் திங்களன்று உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்ததுடன் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிந்தன.
வரலாற்றிலேயே மிகப்பெரிய
பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 3 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து, பீப்பாய் ஒன்றிற்கு 115 டொலருக்கும் அதிகமானது. அமெரிக்கச் சந்தையில் வர்த்தகமாகும் கச்சா எண்ணெய், ஏறக்குறைய 2 சதவீதம் உயர்ந்து 101.62 டொலரை எட்டியது.

இதனால், பிரெண்ட் கச்சா எண்ணெய் வரலாற்றிலேயே மிகப்பெரிய மாதாந்திர உயர்வைப் பதிவு செய்ய வழிவகுத்தது. ஜப்பானின் நிக்கே 225 குறியீடு 2.8 சதவீதம் சரிந்தது; அதேவேளையில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு ஏறக்குறைய 3 சதவீதம் சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், கடந்த வார இறுதியில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி இப்போரில் இணைந்தனர்; மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகளின் இல்லங்கள் மீது பதிலடித் தாக்குதல்களை விரிவுபடுத்துவோம் என்றும் ஈரான் மிரட்டியுள்ளது.
இதனிடையே, ஈரானின் என்ணெய் வளம் மொத்தம் சொந்தமாக்குவோம் என்றும், கார்க் தீவைக் கைப்பற்றுவோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூளுரைத்துள்ளார்.
மேலும், ஈரானியப் பதிலடி குறித்த கேள்விக்கு, அவர்களுக்கு அதற்கான வலுவிருப்பதாக தாம் கருதவில்லை என்றும், மிக எளிதாக கார்க் தீவை நம்மால் கைப்பற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, வெனிசுலா மீது நடந்த அதே முறைத் தாக்குதலை முன்னெடுக்க இருப்பதாகவும், அதில் அமெரிக்கா வெற்றியடையும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியான சூழலை
இந்த நிலையில், அமெரிக்காவின் இப்படியான ஒரு முடிவுக்காக தங்களின் இராணுவம் காத்திருப்பதாக ஈரானிய நாடாளுமன்ற அவைத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுக்குள் அமெரிக்க வீரர்கள் களமிறங்கினால், ஏமனில் இருந்து ஹவுதிகளும், லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும் ஈராக்கில் இருந்து சிறப்புப் படைகளும் ஈரான் ஆதரவாகக் களமிறங்கலாம் என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, தற்போதைய நெருக்கடியான சூழலைக் கருத்தில் கொண்டால், வரும் வாரங்களில் ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 130 டொலரை எட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு முந்தைய நாளான பிப்ரவரி 27 அன்று, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 72 டொலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |