எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க போகிறீர்களா? 18000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கும் Okaya
முன்னணி இ-ஸ்கூட்டர் நிறுவனமான Okaya, வாடிக்கையாளர்களுக்கு பம்பர் சலுகையை அறிவித்துள்ளது.
நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து வகையான ஸ்கூட்டர்களுக்கும் ரூ.18,000 வரை தள்ளுபடி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சிறப்புச் சலுகை இம்மாத இறுதி வரை இருக்கும் என்று நிறுவனத்தின் Managing Director-Anshul Gupta தெரிவித்தார்.
அதிக விலை காரணமாக சிரமங்களை எதிர்நோக்கும் வாடிக்கையாளர்களுக்கு நிதி நன்மையை வழங்கும் நோக்கில் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நிறுவனம் எடுத்துள்ள சமீபத்திய முடிவால், ஒருமுறை சார்ஜ் செய்தால் 74 கிலோமீட்டர் பயணிக்கும் Freedum ஸ்கூட்டரின் விலை ரூ.74,899 ஆகும்.
அடுத்ததாக 140 முதல் 160 கிலோமீட்டர் வரை பயணிக்கும் Faast F4 மாடல் ரூ.1,19,990 ஆக குறைக்கப்படும். விலை குறைப்புக்கு முன் இந்த ஸ்கூட்டர் ரூ.1,37,990 ஆக இருந்தது.
Faast F3 மாடல் ரூ.1,24,990ல் இருந்து ரூ.1,09,990 ஆகவும், Motofaast மாடல் ரூ.1,41,999லிருந்து ரூ.1,28,999 ஆகவும், Faast F2F மாடல் ரூ.93,999லிருந்து ரூ.83,999 ஆகவும், Faast F2B மாடல் ரூ.93,950-ஆகவும், Faast F2T மாடல் ரூ. 92,900 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Okaya Electric Scooters, Electric Scooters Discount, Electric Scooters Offers, Electric Scooters below 1 Lakh