மலிவு விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட ஓலா., ஓட்டுநர் உரிமம், பதிவு தேவையில்லை
மலிவு விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் (Ola Electric), தனது மிகக் குறைந்த விலையிலான மின்சக்கர வண்டியான Ola Gig-ஐ வெளியிட்டுள்ளது.
இதன் சிறப்பம்சம் - பதிவு (Registration) அல்லது ஓட்டுநர் உரிமம் (Driving Lisence) தேவையில்லை!
ஓட்டுநர் உரிமம், பதிவு தேவையில்லை
ஓலா ஜிக் ஒரு குறைந்தவேக மின்சக்கர வண்டியாக இருப்பதால், இதைப் பயன்படுத்த ஓட்டுநர் உரிமமும், வாகன பதிவு செய்தலும் தேவையில்லை.
அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ. என்பதால், நகரத்தில் சிறிய பயணங்களுக்கும், மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஏற்றதாக எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
நல்ல ரேஞ்சு, உறுதியான வடிவமைப்பு
மிகக் குறைந்த விலையிலும், ஓலா ஜிக் செயல்திறனில் எந்தவிதக் குறையும் இல்லை. 1.5 கிலோவாட் லித்தியம்-அயன் பேட்டரி மற்றும் 250W மோட்டர் மூலம் இயங்கும்.
இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 112 கி.மீ. வரை பயணிக்க முடியும். நகரப் பயணங்களுக்கு இது முற்றிலும் ஏற்றது.
நவீன வசதிகள்
ஓலா ஜிகில் பல உபயோகமான அம்சங்கள் உள்ளன. டிஜிட்டல் டிஸ்ப்ளே, திருட்டுத் தடுப்பு அலாரம், புஷ் பட்டன் ஸ்டார்ட், மொபைல் சார்ஜிங் போர்ட், சரக்கு வைக்க ஹூக் மற்றும் டிரே உள்ளிட்டவை உள்ளன.
மெதுவாக தடைகள் இல்லாத டயர்கள், ஃபார்க் சஸ்பென்ஷன் ஆகியவை உள்ளன.
அதிரடியான விலை - ரூ.33,893 மட்டுமே!
ரூ.33,893 எனும் மிகக் குறைந்த விலையில் ஓலா ஜிக் கிடைக்கிறது.
இதனை ஓலாவின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். விரைவில் விநியோகம் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |