150 மில்லியன் ஆண்டுகள் பழமை! உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்
போலந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த புதைப்படிவத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் பெயரை சூட்டியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் நட்சத்திர மீன் வகை இனத்தைச் சேர்ந்த உயிரினம் ஒன்றின் புதைப்படிவத்தை, போலந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கடலுக்கு அடியில் கண்டுபிடித்தனர்.
சுமார் 5 சென்டி மீற்றர் விட்டம் கொண்ட இந்த உயிரினம், 10 நீண்ட கால்கள் மற்றும் கூர்மையான நகங்களை கொண்டது எனவும், 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
MATTHEW NEWBY, SWNS/ZENGER
பழங்கால ஆராய்ச்சியாளர்கள் இந்த உயிரினத்தை Ausichicrinites zelenskyyi என்று அழைத்தனர். ஆயினும், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் பெயரை ஆராய்ச்சியாளர்கள் இந்த உயிரினத்திற்கு சூட்டியுள்ளனர்.
PC: Ukrainian Presidency / Handout/Anadolu Agency via Getty Images
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ' ரஷிய படையெடுப்பில் இருந்து உக்ரைனை பாதுகாப்பதில் ஜெலென்ஸ்கியின் அசாதாரண துணிச்சல் மற்றும் தைரியத்திற்காக அவரது பெயர் வழங்கப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்.
MATTHEW NEWBY, SWNS/ZENGER
மேலும் இந்த உயிரினம் அவர்கள் கூறும்போது, விலங்கு இறந்து அதன் மென்மையான திசுக்கள் சிதைவடையும் போது, எலும்புகள் மற்றும் கைகள் போன்ற உறுப்புகள் வீழ்ச்சியடைகின்றன. எனவே இது ஒரு அரிதான நிகழ்வு என்பதால் முழுமையான கண்டுபிடிப்பு என தெரிவித்தனர்.
MATTHEW NEWBY, SWNS/ZENGER
MATTHEW NEWBY, SWNS/ZENGER