சிறு வயதில் இருந்து திருமண ஆசை! 66 வயதில் 27 பெண்களை ஏமாற்றி திருமணம்... மன்மதனாக வலம் வந்த முதியவர்
இந்தியாவில் 66 வயதான முதியவர் இதுவரையில் 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவத்தின் முழு பின்னணி அம்பலமாகியுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் ஸ்வெயின். 5 அடி 2 அங்குல உயரம் கொண்ட இவர் படித்தது 10-ம் வகுப்பு வரை மட்டுமே. 66 வயதாகும் இவர் சிறு வயது முதலே திருமண ஆசையில் பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியிலிருந்து புவனேஸ்வர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்ட ஒரு பெண், தனது கணவர் குறித்து ஒரு புகார் கொடுத்தார்.
தன்னுடைய கணவர் பல பெண்களை ஏமாற்றி பணத்தை ஏமாற்றியுள்ளார் என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அந்தப் புகாரில் அவர் தெரிவித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் ரமேஷ் குமாரை கைது செய்தனர்.
அப்போது இவர் 14 பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது. இந்நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மொத்தம் 27 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்திய ஒடிசா மாநில உதவி பொலிஸ் ஆணையர் சஞ்சீவ் சத்பதி கூறும்போது, ரமேஷ் குமார் ஒரு விலாசத்தில் நீண்ட நாட்கள் தங்கி இருப்பது இல்லை.
தன்னுடைய இடத்தை அடிக்கடி அவர் மாற்றிக் கொண்டே இருந்துள்ளார். அவர் இதுவரை 27 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் 10 மாநிலங்களைச் சேர்ந்த 27 பெண்களை பணத்துக்காக மணம் முடித்து இருப்பதும் கேரளாவில் 13 வங்கிகளிடம் சுமார் ஒருகோடி ரூபாய் மோடி செய்ததும் 128 போலி கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பதும் தெரிந்து பொலிசாரே அதிர்ச்சியடைந்துவிட்டனர். ஹைதராபாதில் எம்.பிபிஎஸ் படிப்புக்கு இடம் பிடித்து தருவதாக சுமார் 2 கோடி ரூபாய் வசூலித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என பொலிசார் கூறியுள்ளார். விசாரணைக்கு பிறகு மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.