எல்லாம் போலி! பாகிஸ்தான் அரசு மீது ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சாதனையாளர் குற்றச்சாட்டு
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அர்ஷத் நதீம், பாகிஸ்தான் அரசு வாக்குறுதியின்படி நிலம் வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
தங்கப்பதக்கம்
பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் சாதனை படைத்தவர் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம். அவர் இந்தியாவின் நீரஜ் சோப்ராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
அர்ஷத் நதீம் (Arshad Nadeem) பாகிஸ்தானின் முதல் தடகள தங்கத்தைப் பெற்று தேசிய அளவில் கொண்டாடும் நபராகவும் மாறினார்.
இந்த நிலையில் அர்ஷத் நதீம் பாகிஸ்தான் அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
போலி வாக்குறுதி
பாகிஸ்தான் அரசு நிலம் வழங்குவதாக அறிவித்தது போலியானது என்றும், தனக்கு கூறியபடி நிலம் கொடுக்கப்படவில்லை என்பதால் அனைத்து வாக்குறுதிகளும் போலியானவை என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும் பிற பரிசுகள் வழங்கப்பட்டது உண்மைதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அர்ஷத் நதீமின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |