ஓமிக்ரானின் அசல் மாறுபாட்டை விட துணை மாறுபாடு அதிகம் பரவக்கூடியது! ஆய்வில் கண்டுபிடிப்பு
ஓமிக்ரானின் அசல் மாறுபாடான BA.1 விட, BA.2 துணை மாறுபாடு அதிகமாக பரவக்கூடியது என்று டென்மார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஓமிக்ரானின் துணை மாறுபாடான BA.2 டென்மார்க்கில் தீவிரமாக பரவி வருகிறது.
இதனிடையே, டென்மார்க்கில் டிசம்பர் மற்றும் ஜனவரி இடையே 8,500 குடும்பங்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில், BA.1 உடன் ஒப்பிடும்போது, BA.2 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 33% அதிகமாக மற்றவர்களுக்கு தொற்றுவதைக் கண்டறிந்துள்ளனர்.
ஓமிக்ரானின் அசல் மாறுபாடான BA.1 உலகளவில் 98% க்கும் அதிகமான பாதிப்புகளுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது, ஆனால் டென்மார்க்கில் BA.2 ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த ஆய்வின் மூலம் ஓமிக்ரான் BA.2, BA.1-ஐ விட அதிகமாக பரவக்கூடியது என்று நாங்கள் முடிவு செய்கிறோம்.
மேலும் இது நோயெதிர்ப்பு-தவிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் பாதுகாப்பு விளைவை மேலும் குறைக்கிறது என்று ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், BA.2 தடுப்பூசி போடப்பட்டவர்களை பாதிக்கும் வாய்ப்பு அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.