காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சண்டை! வெளியான பரபரப்பு தகவல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் ஆப்கான் பாதுகாப்பு படையினருக்கும் மர்ம நபர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக ஜேர்மன் Joint Forces Operations Command தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தல் தெரிவித்துள்ளது.
ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றிய நாள் முதல் நாட்டை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கானோர், காபூல் விமான நிலையத்தல் குவிந்து வருவதால் அங்கு தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது.
விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் என துப்பாக்கிச் சூடு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 12 உயிரிழந்ததாக தலிபான்கள் அறிவித்தனர்.
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஆப்கான் பாதுகாப்பு படை, வெளிநாட்டு படை மற்றும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காபூல் விமான நிலையத்தில் வடக்கு நுழைவு வாயிலில் மர்ம நபர்கள் மற்றும் ஆப்கான் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக ஜேர்மன் Joint Forces Operations Command தெரிவித்துள்ளது.
Am weiteren Verlauf des Gefechtes waren amerikanische und deutsche Kräfte ebenfalls beteiligt. Alle Soldatinnen und Soldaten der #BundeswehrimEinsatz sind unverletzt.
— Bundeswehr im Einsatz (@Bw_Einsatz) August 23, 2021
இதில், ஆப்கான் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த மோதலில் அமெரிக்க மற்றும் ஜேர்மன் படையினரும் ஈடுபட்டதாக தெரிவித்த ஜேர்மன் Joint Forces Operations Command, ஜேர்மன் வீரர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கூறியுள்ளது.