இவன் காபூலுக்கு வந்துட்டான்! தாலிபான்களுடன் சேர்ந்த மோசமான பயங்கரவாதி! கமெராவில் சிக்கிய காட்சி: கடும் அதிர்ச்சியில் உலக நாடுகள்
அமெரிக்காவால் மிகவும் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகளில் ஒருவர், காபூலில் இருப்பது உலக நாடுகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய சில நாட்களிலே அங்கு அவர்கள் தங்கள் கொடூர முகத்தை காட்ட துவங்கவிட்டனர். இதனால் இதுவரை ஏராளமான அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக முந்தைய ஆட்சியுடன் தொடர்புடையவர்களை தேடி தேடி கொன்று குவித்து வருகின்றனர். இதன் காரணமாக அங்கிருக்கும் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையில் தற்போது மற்றொரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அதில், அமெரிக்காவால் மிகவும் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி ஒருவன் ஆப்கானின் முக்கிய நகரான காபூலில் உள்ளார்.
இவர் அல்கொய்தாவுடன் தொடர்புடையவர் என்பதால், இவருடைய தலைக்கு 5 மில்லியன் டொலர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலா, அவன் இப்போது காபூலில் இருப்பது அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இது பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் அதிர்ச்சி செய்தியில், அமெரிக்காவால் மிகவும் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகளில் ஒருவரான Khalil Haqqani, காபூலில் தாலிபான் போராளிகளுக்காக அங்கு பிரார்த்தனை நடத்தியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
இவர் அல்கொய்தாவுடன் தொடர்பு கொண்டவன் என்பதால், இவனுடைய தலைக்கு பரிசுத் தொகை 5 மில்லியன் டொலர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவனோ காபூல் நகரில் இருக்கும் மிகப் பெரிய மசூதியில் பிரார்த்தனை செய்வதற்கு வந்துள்ளான்.
அதற்கு முன் அங்கிருக்கும் மக்களிடம் பேசி, ஆப்கானிஸ்தானுக்கு, நாங்கள் முதல் பாதுகாப்பு கொடுப்போம், பாதுகாப்பு இல்லை என்றால், வாழ்க்கை இல்லை.
நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம், பிறகு ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருளாதாரம், வர்த்தகம், கல்வி ஆகியவற்றை வழங்குவோம். எந்த பாகுபாடும் இருக்காது என்று கூறுகிறார்.
இதைக் கேட்ட அங்கிருந்த தாலிபான்கள் மற்றும் இன்னும் சிலர் உற்சாகமாக கத்தி, வரவேற்றனர். தாலிபான்களின் எழுச்சிக்கு Haqqani குழு பெரும் பங்கு வகிக்கிறது.
இந்த குழு கடந்த 1970-ஆம் ஆண்டு mujahedeen தளபதி Jalaluddin Haqqani-யால் நிறுவப்பட்டது. கடந்த 2001-ல் இல் இந்த குழு ஒசாமா பின்லேடன் Tora Bora-வில் இருந்து தப்பிக்க உதவியாக சந்தேகிக்கப்படுகிறது.
Haqqani நெட்வொர்க் பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளில் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் இருந்து செயல்படுகிறது. முன்னதாக வளைகுடா நாடுகள் மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் காணப்பட்ட தலிபான்களின் நிதி ஆதரவாளர்களை சந்திக்க Khalil Haqqani உலகம் முழுவதும் பயணம் செய்தார்.
இவர் அல்கொய்தாவின் சார்பாகவும் செயல்பட்டுள்ளதுடன், அதன் இராணுவ நடவடிக்கைகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் தற்போது இந்த குழு ஆப்கானிஸ்தானுக்குள் வந்துள்ளதால், மீண்டும் அல்கொய்தா ஆப்கானிஸ்தானுக்குள் வந்துவிடுமோ என்று பலரும் அஞ்சுகின்றனர்.
இதை உலக நாடுகள் உற்று நோக்கி கவனித்து வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, தாலிபான்கள், அல்கொய்தா போன்ற தீவிரவாதிகளுக்கு நாங்கள் புகலிடம் கொடுக்கமாட்டோம் என்று உறுதியளித்தனர்.
ஆனால், இப்போது அல்கொயாதாவுடன் தொடர்புடைய ஒரு நபர் அங்கிருக்கிறான்.
இது குறித்து பிரித்தானியா உளவுத்துறை அதிகாரி கூறுகையில்,காபூல் பாதுகாப்பிற்கு ஹக்கானி குழு பொறுப்பேற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஹக்கானியும் அல்கொய்தாவும் நீண்ட காலமாக தொடர்பில் உள்ளனர். அவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்று எச்சரித்துள்ளார்.