ரூ.300 கோடி ஓப்பந்தத்தை நிராகரித்த விராட் கோலி - பின்னணியில் இப்படி ஒரு திட்டமா?
இந்தியா கிரிக்கெட் ஜாம்பவானாக வலம் வரும் விராட் கோலி, கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்.
மேலும், பல்வேறு பிராண்டுகளின் விளம்பர தூதராகவும் பணியாற்றி வருகிறார்.
பூமா ஒப்பந்தம்
2024 ஆம் ஆண்டு விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 227.9 மில்லியன் டொலராக(இந்திய மதிப்பில் ரூ.1900 கோடி) உயர்ந்தது.
இதன் மூலம் இந்தியாவின் அதிக பிராண்ட் மதிப்பு உள்ள பிரபலமாக உருவெடுத்தார்.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு, விளையாட்டு வீரர்களுக்கான ஆடை மற்றும் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான பூமா(Puma) 8 ஆண்டு காலத்திற்கு ரூ110 கோடிக்கு விளம்பர தூதராக விராட் கோலியை ஒப்பந்தம் செய்தது.
தற்போது அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க பூமா நிறுவனம் விராட் கோலிக்கு முந்தைய ஒப்பந்த மதிப்பை விட 3 மடங்கு அதிகமாக வழங்க முன்வந்ததாகவும், விராட் கோலி அதை நிராகரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற நிறுவனங்களை விளம்பரப்படுத்துவதை நிறுத்தி விட்டு, தனது சொந்த நிறுவனங்களை வளர்க்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலியின் One8 நிறுவனம்
பூமா நிறுவனத்துடன் சேர்ந்து தொடங்கப்பட்ட, விளையாட்டு வீரர்களுக்கான ஆடை தயாரிப்பு நிறுவனமான தனது One8 நிறுவனத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியில் விராட் கோலி இறங்கியுள்ளார்.
Puma இந்தியா மற்றும் தெற்காசிய பகுதியின் முன்னாள் மேலாண்மை இயக்குனராக இருந்த அபிஷேக் கங்குலி என்பவரால் தொடங்கப்பட்ட அகிலிட்டாஸ் நிறுவனத்துடன் இணைந்து One8 நிறுவனத்தை வளர்க்க முடிவெடுத்துள்ளார்.
Noise, Asian Paints, MRF Tyres, Duro Flex, Myntra, Amaze உட்பட பல்வேறு நிறுவனங்களின் விளம்பர தூதராக கோலி உள்ளார்.
மேலும், Rage Coffee, Chisel Fitness, Blue Tribe, Digit Insurance, Universal Sportsbiz Pvt. Ltd, WROGN உட்பட பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் One8 Commune என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார் கோலி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |