இந்தியா விதித்த ஏற்றுமதி தடை., UAEல் கடுமையாக உயர்ந்த வெங்காயத்தின் விலை
வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது. இந்த தடை மார்ச் 2024 வரை நீடிக்கும்.
இதனால், லட்சக்கணக்கான இந்தியர்கள் வசிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்தது.

உலகில் எந்த நாட்டவருக்கும் Visa தேவையில்லை., பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாட்டின் அறிவிப்பு
இந்தியாவின் ஏற்றுமதி தடைக்கு பின், இதுவரை 6 மடங்கு விலை உயர்ந்துள்ளது. தற்போது கிலோ ஒன்றுக்கு 8 முதல் 12 Dirham வரை விலை உள்ளது. அதாவது ரூ.181 முதல் ரூ.270 வரை. அதேசமயம், LuLu போன்ற hypermarketகளில் விலை அந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை.
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாரத்திற்கு எட்டு கன்டெய்னர் வெங்காயம் வரை ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் உள்நாட்டு சந்தையில் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை தடுக்க இந்தியா ஏற்றுமதியை தடை செய்தது. இந்த தடை அடுத்த ஆண்டு மார்ச் வரை நீடிக்கும். தற்போது, கையிருப்பில் உள்ள வெங்காயம் ஐக்கிய அரபு அமீரக பொதுச் சந்தையில் விற்கப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி துருக்கி, பாகிஸ்தான், ஈரான், சீனா போன்ற நாடுகளில் இருந்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சந்தைக்கு வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது.
வெங்காயம் விலை ஆறு மடங்கு உயர்ந்துள்ளதால் நெருக்கடியை சமாளிக்க மற்ற நாடுகளில் இருந்து அதிக வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் முயற்சித்து வருகிறது.
ஆனால், அளவு மற்றும் தரத்தில் துருக்கி, ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வெங்காயத்தை விட இந்திய வெங்காயம் சிறந்தது. இந்திய வெங்காயத்திற்கும் அதிக தேவை உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Onion price in India, Onion Price in United Arab Emirates, India Onion Export Ban, Onion prices skyrocket in UAE, United Arab Emirates Dirham, INR