பிரேசில், பிரித்தானியா, தென் ஆப்பிரிக்கா என அனைத்து உருமாறிய கொரோனாவையும் தடுக்கக்கூடிய ஒரு தடுப்பூசி இது தான்! ஆய்வில் நிரூபணம்
Pfizer தடுப்பூசி, மிகவும் தீவிரமாக பரவக்கூடிய பிரேசிலிய P.1 மாறுபாட்டை தடுக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Pfizer/BioNTech தடுப்பூசி பெற்றவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்தம், P.1 போன்ற உருமாறிய வைரஸிக்கு எதிராக பயனுள்ளதாக இருந்தது என்று New England Journal of Medicine-ல் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலிய மாறுபாட்டிற்கு எதிராகவும் தடுப்பூசியின் செயல்திறன், கிட்டதட்ட 2020-ல் தோன்றிய குறைந்த வீரியம் கொண்ட தொற்றுக்கு எதிராக செயல்பட்டது போல் தான் இருந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Pfizer முன்னர் அதன் தடுப்பூசி இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிற தொற்று வகைகளையும் தடுக்க முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளது.
பிரேசிலின் கொரோனா வைரஸ் மாறுபாடு தற்போது தடுப்பூசி விநியோகத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அதிக எண்ணிக்கையில் இங்கிலாந்தில் பரவவில்லை என பொது சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்,