புடினின் அணி சேர்ப்பு அழைப்பிற்கு எதிர்ப்பு: வரைவு அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்
ரஷ்ய வரைவு அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய 25 வயது நபர் கைது.
சிறந்த நண்பருக்கு அழைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டதால், துப்பாக்கிதாரி வருத்தம்.
இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய இராணுவ பாதுகாப்பு வரைவு அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய 25 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உக்ரைன் உடனான போர் நடவடிக்கையில் ரஷ்ய படைகள் பின்னடைவை சந்தித்ததை தொடர்ந்து, இரண்டாம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக ரஷ்ய ஜனாதிபதி புடின் 3,00,000 வீரர்களை உள்ளடக்கிய ராணுவ அணிதிரட்டலுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஜனாதிபதி புடினின் ராணுவ அணிதிரட்டல் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை செயல்படுத்தி வரும் வரைவு அலுவலகத்தில் Ruslan Zinin என்ற மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்து தாக்குதல் நடத்தினார்.
Gunman opens fire at Russian draft office amid backlash to Putin's military mobilization pic.twitter.com/XgPRUDdArB
— KT "Special NATO Intelligence Operation" (@KremlinTrolls) September 26, 2022
இதில் ரஷ்ய பாதுகாப்பு வரைவு அலுவலகத்தின் தலைவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பிராந்திய ஆளுநர் இகோர் கோப்சேவ் (Igor Kobzev) டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியான இது தொடர்பான காட்சிகளில், ரஷ்ய வரைவு அலுவலகத்தின் உள்ளே நுழையும் மர்ம நபர் தன்னை ருஸ்லான் ஜினின் என்று பொலிஸாரிடம் அடையாளப்படுத்துவதை காட்டுகின்றன.
மேலும் ரஷ்ய ஊடக அறிக்கையில், ”யாரும் சண்டைக்கு செல்ல வேண்டாம், நாம் அனைவரும் இப்போது வீட்டிற்குச் செல்வோம் என தெரிவித்து அலுவலகத்திற்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: வின்ட்சர் கோட்டையை ஹரியும் மேகனும் விரும்பினர்: ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்டதோ?
போர் அனுபவம் இல்லாத அவரது சிறந்த நண்பருக்கு அழைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டதால், துப்பாக்கிதாரி வருத்தமடைந்ததாகக் கூறப்பட்டது.