ஆப்ரேசன் காவேரி திட்டத்தின் மூலம் சூடானில் இருந்து 231 இந்தியர்கள் மீட்பு
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரிடையே போர் நடைபெற்று வருவதால், அங்கு வாழும் இந்தியர்கள் ஆப்ரேசன் காவேரி திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
சூடானில் தொடரும் மோதல்
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரிடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
இந்த போரினால் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, 3000 பேருக்கு மேல் பலத்த காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
@twitter
இதனை தொடர்ந்து சூடானில் வாழும் வெளிநாட்டு மக்கள் பாதிக்கப்படுவதை தொடர்ந்து, உலக நாடுகள் ராணுவ உதவிகள் மூலம் தங்கள் நாட்டு மக்களை மீட்டு வருகின்றனர்.
@twitter
இந்திய அரசால் சூடானிலிருந்து இந்தியர்களை மீட்க ஆப்ரேசன் காவேரி என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சூடானிலிருந்து இந்தியர்கள் தொடர்ந்து மீட்கப் பட்டு வருகிறார்கள்.
இண்டிகோ விமானம் மூலம் மீட்பு
அடிப்படை தேவையான உணவு மற்றும் நீர் போன்றவற்றுக்கே போராடி வந்த இந்தியர்கள், கப்பல் மற்றும் விமானம் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இன்டிகோ என்ற விமான நிறுவனம் இந்த திட்டத்தின் மூலம் இணைந்து, முதல் முறையாக 231 இந்தியர்கள் ஜெட்டா என்ற பகுதியிலிருந்து மீட்டுள்ளனர்.
Indigo joins #OperationKaveri.
— V. Muraleedharan (@MOS_MEA) April 28, 2023
231 Indians in a flight to New Delhi from Jeddah.
With this 5th outbound flight, around 1600 reached or airborne for India.
Happy journey.
Our Mission continues. pic.twitter.com/5JtBR0sHCF
”இண்டிகோ நிறுவனம் ஆப்ரேசன் காவேரி திட்டத்தில் இணைந்து இதுவரை 231 இந்தியர்களை மீட்டிருக்கிறது, மேலும் கட்டாவிலிருந்து 5வது முறை இந்தியா செல்லும் விமானம் மூலம் 1600 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர், மீட்கப்பட்டவர்களின் பயணம் இனிதாகட்டும். ஆப்ரேசன் காவேரி திட்டம் தொடர்ந்து செயல்படும்” என வெளியுறவு துறை துணை அமைச்சர் முரளிதரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
@twitter
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே தொடர்ந்து, மோதல் நடந்து வருவதால் பதட்டமான சூழல் நிலவுகிறது. தற்போது நடைபெற்று வரும் 72 மணி நேர போர் நிறுத்தத்தின் போதும் வன்முறை மற்றும் மோதல்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.