மனம் திருந்தினால் ஏற்பதே அழகு! சசிகலா குறித்து சூசகமாக பேசிய ஓபிஎஸ்... அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு
சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் விதமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
அப்போது அவர், இயேசு பிரான் கதையை கூறி, பாவத்தை சுமந்தவர்களை மனம் திருத்த வந்துள்ளேன் என இயேசு சொன்ன வார்த்தைகளை எடுத்துக்காட்டாக கூறினார்.
தொடர்ந்து பேசிய பன்னீர்செல்வம், 'தவறு செய்பவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதுதான் தலைமைக்கு அழகு,' எனத் தெரிவித்தார். நீண்ட காலமாக சசிகலாவை அதிமுகவில் சேர்க்கப்போவதாக செய்திகள் வெளிவரும் நிலையில், பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.ஜெயக்குமார், சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது என்பதில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் உறுதியாக இருக்கிறார்கள்.
சசிகலாவுக்காக, ஓ.பி.எஸ் அந்தக் குட்டிக்கதையை சொல்லவில்லை. பாமர்களுக்காக கூறிய கதையை சசிகலாவுக்கு பொருந்தாது எனத் தெரிவித்தார்.