பல இலக்குகளை ஒரேயடியாக முடிக்கும்... உக்ரைன் மீது ரஷ்யா ஏவிய Oreshnik ஏவுகணை
பல இலக்குகளை ஒரேயடியாக தாக்கும் திறன் கொண்ட Oreshnik ஏவுகணையை உக்ரைன் மீது ஏவியதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது.
அணு ஆயுதங்கள்
Oreshnik என்றால் ஹேசல் மரமாகும். ஆனால், ரஷ்யாவின் இந்த Oreshnik ஏவுகணையானது ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை வரிசையை சேர்ந்தது.

2024 நவம்பர் மாதமும் உக்ரைன் மீது Oreshnik ஏவுகணையை ரஷ்யா ஏவியுள்ளது. அப்போது அதில் அணு ஆயுதங்கள் பொருத்தப்படவில்லை. இதனால், சேதங்களும் மிகக் குறைவாகவே பதிவானது.
அது வெறும் ஒரு சோதனை முயற்சியாகவே ரஷ்யாவால் பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது உக்ரைன் மீது ஏவிய Oreshnik ஏவுகணையில் அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தால், ரஷ்யா Oreshnik ஏவுகணையை முழு அழிவு நோக்கத்துடன் முதல் முறையாக பயன்படுத்தியதாக கருதப்படும்.
உக்ரைனில் ரஷ்யா முக்கியமான உள்கட்டமைப்பு மீது குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது, இருப்பினும் சேதத்தின் அளவு உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.
Oreshnik ஏவுகணையானது ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இந்த Oreshnik ஏவுகணை, ரஷ்யா முதலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக உருவாக்கிய RS-26 Rubezh ஐ அடிப்படையாகக் கொண்டது.

இடைமறிப்பது சாத்தியமற்றது
பல ரஷ்ய ஆயுத அமைப்புகளைப் போலவே, Oreshnik ஏவுகணையும் அணு ஆயுதங்களையும் வழக்கமான போர் ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஆனால் வெளியான தகல்களின் அடிப்படையில், ரஷ்யா இந்த முறையும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை.
2024 ஆம் ஆண்டு ஏவப்பட்ட Oreshnik ஏவுகணையானது தெற்கு ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்ட பிறகு அதன் இலக்கை அடைய சுமார் 15 நிமிடங்கள் எடுத்ததாகவும், மணிக்கு சுமார் 13,600 கிமீ வேகத்தை எட்டியதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

Oreshnik ஏவுகணையானது இடைமறிப்பது சாத்தியமற்றது என்றும், அது அணு ஆயுதத்தின் அழிவு சக்தியைக் கொண்டுள்ளது என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பெருமையாகக் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |