ஹாலோவீன் போட்டிக்காக கூடிய மக்கள்: நடந்த திடீர் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி
அமெரிக்காவின் ஒர்லேண்டோ நகர மையத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதோடு 7 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு
புளோரிடாவின் ஒர்லேண்டோ(Orlando) நகர மையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்து இருப்பதுடன் 7 பேர் காயமடைந்து உள்ளனர்.
சென்ட்ரல் புல்லுவர்ட்(Central Boulevard) மற்றும் ஆரஞ்சு அவென்யூ(Orange Avenue) சந்திப்புப் பகுதியில் உள்ள 'தி பிளாக்' (The Block) எனப்படும் பிரபல நைட்லைஃப் மாவட்டத்தில்(nightlife district) இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹாலோவீன் ஆடைக் போட்டியில் பங்கேற்கும் பொருட்டு நூற்றுக்கணக்கானோர் அப்பகுதியில் கூடியிருந்தனர்.
காலை 1.10 மணியளவில் கேட்ட துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் வாஷிங்டன் தெரு மற்றும் ஆரஞ்சு அவென்யூ சந்திப்பு பகுதியில் இரண்டாவது துப்பாக்கி சூடு அரங்கேறியது.
அவசர சிகிச்சை
இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 19 முதல் 31 வயது வரையிலான நபர்கள் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதற்கிடையில் துப்பாக்கிச் சூட்டின் காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |