இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்குள் மர்ம ட்ரோன்கள்: விமான நிலையங்கள் மூடப்பட்டதால் பெரும் குழப்பம்
போலந்து நாட்டுக்குள் ரஷ்ய ட்ரோன்கள் நுழைந்த விடயம் ஐரோப்பா முழுவதும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில், மேலும் இரண்டு ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களுக்குள் மர்ம ட்ரோன்கள் காணப்பட்டதையடுத்து அவை மூடப்பட்டன.
இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்குள் மர்ம ட்ரோன்கள்
நேற்று, அதாவது, திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில், டென்மார்க் நாட்டிலுள்ள கோப்பர்ஹேகன் விமான நிலையத்துக்குள் இரண்டு ட்ரோன்கள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து விமான நிலையம் மூடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இரவு 11.00 மணியளவில் டென்மார்க்குக்கு அருகிலுள்ள நாடான நோர்வேயின் தலைநகரான Oslo விமான நிலையத்தில் ஒரு ட்ரோன் தென்பட்டுள்ளது, பின்னர், 12.30 மணியளவில் மீண்டும் ஒரு மர்ம ட்ரோன் தென்படவே, Oslo விமான நிலையமும் மூடப்பட்டது.
அந்த ட்ரோன்களை ட்ராக் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டும் இதுவரை அவற்றைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இந்த இரண்டு முக்கிய விமான நிலையங்களும் மூடப்பட்டதால் ஏராளமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட, பல விமானங்களின் புறப்பாடும் தரையிறக்கமும் தடை செய்யப்பட பயணிகள் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார்கள்.
இதற்கிடையில், கோப்பர்ஹேகன் விமான நிலையம், இன்று, அதாவது, செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |