நட்சத்திர ஹொட்டலில் உணவருந்திய 100க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு
ஸ்பெயின் நாட்டிலுள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் உணவருந்திய 100க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிகப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
100க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் பாதிப்பு
பிரித்தானியர்களின் விருப்ப சுற்றுலாத்தலமான ஸ்பெயினிலுள்ள Murcia நகரில் அமைந்துள்ளது நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற Izan Cavanna ஹொட்டல்.
சனிக்கிழமையன்று, அந்த ஹொட்டலில் உணவருந்திய 100க்கும் அதிகமானோருக்கு வாந்தி, தலை சுற்றல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. சிலருக்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக சிலர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், ஹொட்டலிலேயே ஒரு அவசர தற்காலிக மருத்துவ அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 15 மாதக் குழந்தை ஒன்றும் 7 சிறுவர்களும் அடங்குவர்.
அந்த ஹொட்டலில் உணவருந்தியவர்களுக்கு சால்மோனெல்லா என்னும் கிருமித் தொற்று பாதித்துள்ளதாக முதற்கட்ட பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
உடனடியாக அந்த ஹொட்டலின் சமையற்கூடம் மூடப்பட்டுள்ளதுடன், அதை முழுமையாக சுத்தம் செய்து கிருமிநீக்கம் செய்யவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பாதிப்பை ஏற்படுத்தியது என்ன உணவு? பாதிக்கப்பட்டவர்களில் எத்தனை பேர் பிரித்தானியர்கள் என்பது போன்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |