காபூலில் இந்தியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கடத்தல்? ஆட்டத்தை ஆரம்பித்த தலிபான்கள் ! வெளிவரும் அதிர்ச்சி தகவல்
காபூல் விமான நிலையத்திற்கு அருகே வைத்து இந்தியர்கள் உட்பட சுமார் 150 பேரை தலிபான்கள் கடத்திச்சென்றுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று ஆகஸ்ட் 21ம் தேதி காலை Hamid Karzai சர்வதேச விமான நிலையத்திற் அருகே வைத்து இந்தியர்கள் உட்பட 150 பேரை தலிபான்கள் கடத்தியதாக Kabul Now செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கடத்தலில் இருந்த தப்பிய நபர் அளித்த தகவலின் படி, கடத்தப்பட்டவர்களில் சில ஆப்கானிஸ்தான் குடிமக்கள் மற்றும் ஆப்கான் சீக்கியர்களும் அடங்குவர். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் என தெரிவித்துள்ளார்.
நாங்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற நள்ளிரவு 01:00 மணியளவில் எட்டு மினிவேன் வாகனங்களில் ஏறி காபூல் விமான நிலையத்திற்கு சென்றோம், ஆனால் விமான நிலையத்திற்குள் நுழைய முடியவில்லை.
ஆயுதம் ஏதுமின்றி வந்து அணுகிய தலிபான்கள், எங்களை சரமாரியாக தாக்கி காபூலின் கிழக்கு அண்டை பகுதியான தாரகிலுக்கு அழைத்துச் சென்றனர்.
நானும் எனது மனைவியும், மேலும் சிலரும் மினிவேன்களின் ஜன்னல்களை உடைத்து, அதன் வழியே கீழே குதித்து தப்பிவிட்டோம் என தப்பி வந்தவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தற்போது கடத்தப்பட்ட இந்தியர்கள் உட்பட பலர் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை.
கடத்தப்பட்டவர்களிடமிருந்த மொபைல் போன்கள் அனைத்தையும் தலிபான்கள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே, தலிபான்கள் யாரையும் கடத்தவில்லை என போராளிகள் குழுவின் செய்தித்தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.