ஆபத்து! கொரோனாவால் பாதித்தவர்கள் இதை தவிர்க்க வேண்டும்... விஞ்ஞானிகள் முக்கிய தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் செல்லப்பிராணிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உரிமையாளர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருக்கும் போது அவர்களின் பூனை மற்றும் நாய்களும் தொற்றால் பாதிக்கப்பட்டதை நெதர்லாந்தில் உள்ள Utrecht பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், கொரோனா தொற்றால் செல்லப்பிராணிகளுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படாது என்றாலும், அவை மனிதர்களுக்கு மீண்டும் தொற்றை பரப்பக்கூடிய ஆபத்து உள்ளது.
இதுவரை கொரோனா செல்லப்பிராணிகளிடமிருந்து மனிதனுக்கு பரவியதாக ஏதுவும் பதிவாகவில்லை.
ஆனால் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவியதற்கான சாத்தியம் இருப்பதால் விஞ்ஞானிகள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள்.
உதாரணமாக, தற்போது வரை கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது அறியப்படவில்லை.
ஆனால், வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிர்களுக்கு பரவியதாக விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.