கடலில் விழுந்த வாழைப்பழங்கள்:பிரித்தானியாவில் புறப்படத் தயாரான பயணிகள் கப்பல் நிறுத்தம்
கடலில் சரக்கு பெட்டிகள் விழுந்ததை அடுத்து பயணிகள் கப்பலின் பயணம் எதிர்பாராத விதமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட பயணம்
இரண்டு வார சுற்றுப்பயணமாக ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் கேனரி தீவுகள் ஆகிய நாடுகளுக்கு சனிக்கிழமை மாலை பயணத்தை தொடங்க இருந்த P&O Cruises நிறுவனத்தின் அயோனா(Iona) கப்பலின் பயணம் எதிர்பாராத விதமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான பயணிகளுடன் சவுதாம்டனில் இருந்து புறப்பட இருந்த இந்த குரூஸ் கப்பல், கடலில் சரக்கு பெட்டிகள் விழுந்ததை அடுத்து எதிர்பாராத விதமாக துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடலில் விழுந்த சரக்கு பெட்டிகள்
P&O Cruises நிறுவனத்தின் அயோனா பயணிகள் கப்பல் கிளம்புவதற்கு சற்று முன்னதாக, பால்டிக் கிளிப்பர்(Baltic Klipper) என்ற சரக்கு கப்பலில் இருந்து கிட்டத்தட்ட 16 சரக்குப் பெட்டிகள் கடலில் விழுந்தன.
ஐல் ஆஃப் வைட்(Isle of wight) அருகில் பெம்பிரிட்ஜுக்கு தொலைவில் உள்ள நப் டவர் (Nap Tower) அருகே டிசம்பர் 6ம் திகதி இந்த எதிர்பாராத சம்பவமானது ஏற்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பால்டிக் கிளிப்பர் படகில் இருந்த ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வெளியான தகவல்களின் படி, கடலில் விழுந்த சரக்கு பெட்டிகளில், வாழைப்பழங்கள்(8), பிளாண்டெய்ன்(2), அவகாடோ(1) என வெப்பமண்டல் பழங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 சரக்கு பெட்டிகளில் 5 பெட்டிகள் காலியாக இருந்துள்ளன.
ஞாயிற்றுக் கிழமைக்குள் சரக்கு பெட்டியின் ஒரு பகுதி வெஸ்ட் சசெக்ஸில் உள்ள செல்சி கடற்கரையில் கரை ஒதுங்க தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |