ஆம்ஸ்ட்ராங்கை இழந்த வேதனையில் தான் பா.ரஞ்சித் அப்படி பேசியுள்ளார்! போஸ் வெங்கட் நம்பிக்கை
திமுக மீது இயக்குநர் பா.ரஞ்சித் வைத்த குற்றசாட்டுகளை அவரே திரும்ப பெற்றுக்கொள்வார் என நம்புகிறேன் என்று போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.
திமுகவை விமர்சித்த பா.ரஞ்சித்
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 -ம் திகதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்தனர்.
அந்தவகையில் இயக்குநர் பா.ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் திமுக தலைமையிலான தமிழக அரசை விமர்சித்து 6 கேள்விகள் எழுப்பினார்.
1. சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?
2.இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா?
3.பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது?
4. தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.
5.உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா?
6.கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன? போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தார்.
போஸ் வெங்கட் பதிவு
இந்நிலையில் நடிகரும் திமுக பேச்சாளருமான போஸ் வெங்கட் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "தோழர் ரஞ்சித் அண்ணனை இழந்த வேதணையில் வெளிவந்த வார்த்தைகளாக அந்த பதிவை எடுத்துக்கொள்கிறேன்.
மற்றபடி திமுக மீது அவர் வைத்த குற்றசாட்டுகளை அவரே திரும்ப பெற்றுக்கொள்வார் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |