ரூ.2000 கோடிக்கு ஏலம் போன ஓவியம்: வரலாற்றிலேயே இதுவே 2வது முறை!
ஆஸ்திரியாவைச் சேர்ந்த கலைஞரின் ஓவியம் ஒன்று அமெரிக்காவில் ரூ.2000 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
ரூ.2000 கோடிக்கு ஏலம் போன ஓவியம்
அமெரிக்காவை சேர்ந்த சோதேபிஸ் ஏல நிறுவனம் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஓவிய கலைஞர் குஸ்டாவ் கிளிம்ட் வரைந்த ஓவியத்தை ஏலத்தில் விட்டது.
நியூயார்க்கில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 6 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு ஓவியத்தை வாங்க போட்டியிட்டனர்.

20 நிமிடங்கள் நீடித்த இந்த ஏலத்தின் இறுதியில் குஸ்டாவ் கிளிம்ட் வரைந்த ஓவியம் சுமார் 236.4 அமெரிக்க டொலருக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2000 கோடி) வாங்கப்பட்டது.
ஓவியத்தை வாங்கியவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் அமெரிக்க வரலாற்றில் அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்ட 2வது ஓவியம் என்ற பெருமை குஸ்டாவ் கிளிம்ட் வரைந்த ஓவியம் பெற்றுள்ளது.
வெள்ளை அங்கி அணிந்த லிசபெத் லெடரர் என்ற பெண் நீல நிற திரைச்சீலையின் முன் நிற்பதை காட்டும் இந்த ஓவியம் 1914-1916ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் வரையப்பட்டதாகும்.

இரண்டாம் உலகப் போரின் போது நாஜி படைகளால் கொள்ளையடிக்கப்பட்ட இந்த ஓவியம் பின்னர் 1948ம் ஆண்டு மீண்டும் மீட்கப்பட்டது.
குஸ்டாவ் கிளிம்ட் தன்னுடைய வாடிக்கையாளரின் மகளை இந்த ஓவியத்தில் வரைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |