போரில் வெளிநாட்டு கூலிப்படையை களமிறக்கிய ரஷ்யா: ஜெலென்ஸ்கி கண்டனம்
உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாக வெளிநாடுகளை சேர்ந்த கூலிப்படை வீரர்கள் சண்டையிடுவதாக உக்ரைனிய ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் போரில் சீனா, பாகிஸ்தான் வீரர்கள்
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் சீனா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த கூலிப்படை வீரர்கள் சண்டையிட்டு வருவதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டானது, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததோடு, லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ள தொடர்ந்து வரும் நீண்ட நெடிய போருக்கு மத்தியில் வந்துள்ளது.
கார்கிவ் பகுதியின் முன்னணி படையினரான 57வது படைப்பிரிவின் 17வது தனி காலாட்படை வீரர்களை சந்தித்த போது, ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் வீரர்கள் வெளிநாட்டு கூலிப்படை வீரர்களின் இருப்பு குறித்து தெரிவித்ததோடும், அவர்களிடம் தொடர்ந்து போரிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர்களத்தில் உள்ள நமது வீரர்கள், சீனா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த கூலிப்படை வீரர்கள் ரஷ்யா சார்பாக சண்டையில் இடம்பெற்று இருப்பதாகவும், அவர்களை எதிர்த்து சண்டையிட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Today, I was with those defending our country in the Vovchansk direction – the warriors of the 17th Separate Motorized Infantry Battalion of the 57th Brigade named after Kish Otaman Kost Hordiienko.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) August 4, 2025
We spoke with commanders about the frontline situation, the defense of… pic.twitter.com/40XsGHZU0T

ரஷ்யாவிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்யும் அமெரிக்கா: இந்தியாவின் கேள்வியால் டிரம்புக்கு வந்த சிக்கல்!
இந்த போர் அத்துமீறலுக்கு நிச்சயமாக நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
வீரர்களுக்கு விருதுகள்
ராணுவ வீரர்களுடனான இந்த சந்திப்பின் போது, ஜெலென்ஸ்கி வோவ்சான்ஸ்க் பகுதியில் நடைபெற்று வரும் மோதல்கள் குறித்தும், ஆயுதங்களுக்கான நேரடி நிதி ஆதரவு குறித்து கேட்டறிந்தார்.
அத்துடன் துணிச்சல் மிக்க வீரர்களுக்கு சிறப்பு மாகாண விருதுகளையும் வழங்கி கவுரவித்துள்ளார்.
அப்போது, உக்ரைனிய மக்களை பாதுகாப்பதற்கும், அனைவருக்கும் ஆதரவாக இருப்பதற்கும் ஜெலென்ஸ்கி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில், சமீபத்தில் துருக்கியில் நடைபெற்று பேச்சுவார்த்தையின் முடிவில் கிட்டத்தட்ட 1200 கைதிகளை விடுவிப்பது குறித்து முக்கிய ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு இருப்ப தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |