பாகிஸ்தானில் தேசிய சட்டமன்றத்தில் கிடந்த பணம் - உரிமை கோரிய 12 எம்.பிக்கள்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழ் அவையான தேசிய சட்டமன்றத்தில் நடந்த விசித்திரமான சம்பவம், அந்நாட்டின் அரசியல் ஊழலை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
டிசம்பர் 8-ஆம் திகதி, சபை அமர்வின்போது சபாநாயகர் அயாஸ் சதிக் தரையில் விழுந்திருந்த 10,000 ரூபாய் மதிப்புள்ள 10 நோட்டுகளை எடுத்து, “இந்த பணம் யாருடையது?” என்று கேட்டுள்ளார்.
அதற்கு ஆச்சரியமாக, 12 சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளை உயர்த்தி, அந்த பணம் தங்களுடையது என உரிமை கோரியுள்ளனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சபாநாயகர் நகைச்சுவையாக, “10 நோட்டுகளுக்கு 12 உரிமையாளர்கள்” என்று கூறியுள்ளார்.

பின்னர், அந்த பணம் PTI கட்சியின் முகமது இக்பால் ஆஃப்ரிடி என்பவருக்குச் சொந்தமானது என உறுதி செய்யப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி, பாகிஸ்தான் மக்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலர், “இது பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் நேர்மையின்மையை வெளிப்படுத்துகிறது” எனக் கூறியுள்ளனர்.
சிலர், “சபையில் அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் மோசடிகள், நாட்டின் முன்னேற்றம் சாத்தியமில்லை” எனக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
🇵🇰 पाकिस्तान के Assembly में अध्यक्ष ने कुछ पैसा दिखाकर कहा कि "ये किसी के पैसे गिर गए है, जिनका है हाथ खड़ा करे"।
— Einstein Yadav (@GYdv28) December 9, 2025
अब जितने पैसे नहीं थे उतने से अधिक सांसदों ने पैसे लेने के लिए अपना हाथ खड़ा कर दिया।😂🤣🤣 pic.twitter.com/fDeJ2xm4Qa
சமீபத்திய சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கையிலும், பாகிஸ்தானில் ஊழல் “நிலையானது, தீவிரமானதும” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் வணிக பெரும்புள்ளிகள், அரசின் கொள்கைகளை தங்கள் நலனுக்காக மாற்றிக் கொள்வது, நாட்டின் பொருளாதார நெருக்கடியை மோசமாக்குகிறது என அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
மேலும், 2024-ஆம் ஆண்டுக்கான ஊழல் குறியீட்டில் (CPI) பாகிஸ்தான் 135வது இடத்தில், 27 புள்ளிகளுடன் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளது.
இந்த சம்பவம், பாகிஸ்தான் அரசியலில் ஊழல் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது. மக்களின் நம்பிக்கையை மீட்க, கடுமையான சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புணர்வு அவசியம் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Pakistan Speaker cash scandal, Ayaz Sadiq cash notes incident, 12 MPs claim lost money Pakistan, National Assembly corruption row, Viral video Pakistan parliament cash, PTI lawmaker Iqbal Afridi money claim, Pakistan political corruption 2025, IMF report Pakistan governance crisis, Corruption Perception Index Pakistan, Social media reaction cash scandal