பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நிறுத்தம்: தோஹாவில் பேச்சுவார்த்தை உடன்பாடு
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் அறிவிப்பு
கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே ஒருமித்த உடனடி போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்த நிலையில், கத்தாரின் தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த முக்கிய உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அறிக்கையில், இரு நாடுகளும் தங்களுக்கு இடையே உள்ள சண்டையை உடனடியாக நிறுத்துவதுடன், இருநாடுகளும் தங்களுக்கு இடையே நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பலப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் உறுதியளித்துள்ளன.
ஒப்பந்தத்தின் படி, இருநாடுகளும் எதிர்வரும் நாட்களில் நேரடி சந்திப்புகளை நடத்தி பேச்சுவார்த்தை மேற்கொள்ள ஒப்புக் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புகள் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை தொடர்ந்து நிலைநிறுத்தவும், அதன் அமலாக்கத்தை நிலைநாட்டவும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |