முகேஷ் அம்பானியின் எண்ணெய் ஆலைக்கு குறி: பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் மிரட்டல்
இந்தியாவுடன் இனி எந்தவொரு மோதலின் போதும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப் போவதாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
மோதல் ஏற்பட்டால்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த ஒரு ரகசிய இரவு விருந்து சந்திப்பின் போதே அசிம் முனீர் இந்தியாவின் பொருளாதாரத்தை தொட்டுப்பார்க்கும் கருத்தை முன்வைத்துள்ளார்.
இன்னொருமுறை இந்தியாவுடன் மோதல் ஏற்பட்டால், அதன் விளைவு கடுமையாக இருக்கும் என முனீர் குறிப்பிட்டுள்ளார். குஜராத்தின் ஜாம்நகரில் அமைந்துள்ள முகேஷ் அம்பானியின் எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலையானது உலகிலேயே ஒரே இடத்தில் செயல்படும் மிகப்பெரிய நிலையமாகும்.
ஆண்டுக்கு 35 மில்லியன் டன் கச்சா எண்ணெய் சுத்தீகரிக்கப்படுகிறது. மட்டுமின்றி இந்தியாவின் மொத்த சுத்திகரிப்பு திறனில் சுமார் 12 சதவீதம் இந்த ஒரு ஆலையில் இருந்தே நிர்வகிக்கப்படுகிறது. அத்துடன் உலக நாடுகள் பல பெட்ரோலிய பொருட்களை இங்கிருந்து இறக்குமதி செய்கிறது.
நேரிடையாக மிரட்டல்
கடந்த காலங்களிலும் முகேஷ் அம்பானியின் எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை உட்பட பல நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத குழுக்களிடம் இருந்து அச்சுறுத்தல் இருந்ததாக தகவல்கள் வெளியானதுண்டு.
ஆனால் தற்போது பாகிஸ்தான் தளபதியே நேரிடையாக மிரட்டல் விடுத்திருப்பது, ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தான் என கூறப்படுகிறது. மட்டுமின்றி, இந்தியாவிற்கு எதிராக மிரட்டல் விடுத்துள்ளதும் அமெரிக்காவில் ஒரு இரவு விருந்தின் போது என்பதே இதன் பின்னணி குறித்து நிபுணர்களை அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது.
மேலும், இதே விருந்தில் வைத்தே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பிலும் முனீர் இந்தியாவை விமர்சித்துள்ளார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் பாகிஸ்தானின் உரிமை என்றும் முனீர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |