முத்தரப்பு டி20 தொடர்: இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி
முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் - இலங்கை மோதல்
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்கள் குவித்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக ஜெனித் லியாங்கே 41 ஓட்டங்கள் குவித்தார்.
பாகிஸ்தான் வெற்றி
129 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 15.3 ஓவர்கள் முடிவிலேயே 131 ஓட்டங்கள் குவித்து அபார வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷாஹிப்ஜாதா பர்ஹான் 45 பந்துகளில் 80 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இலங்கை இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |