பாகிஸ்தானில் பாரிய குண்டு வெடிப்பு... பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பாகிஸ்தானில் முகமது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பேரணியில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகின்றது.
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் முஹம்மது நபியின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஊர்வலத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
District Police Office via AP
காயமடைந்தவர்கள் இரண்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பின் எண்ணிக்கை கூடும் என தெரிகிறது.
அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் புக்டி இந்த குண்டுவெடிப்பு "மிகவும் கொடூரமான செயல்" என்று கூறியுள்ளார்.
[District Police Office via AP
இந்நிலையில் அப்பகுதியில் அதிகாரிகள் அவசர நிலையை அறிவித்துள்ளனர்.
மேலும் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்காத நிலையில் பாகிஸ்தான் போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |